தமிழ் சினிமாவில் பெருகிவரும் திருட்டு விசிடிக்களை ஒழிக்க தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒரு கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் பல சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஆகவே இனி குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களைத் திரையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த திருடு விசிடிக்களால் சினிமாவில் உள்ள கலைஞர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிசம்பர் 2ம் தேதி பேரணி நடித்த முடிவு செய்துள்ளனர்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment