விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இப்போது வந்துள்ள தகவல் என்னவென்றால், விஜய், அட்லீயுடன் இணையவிருக்கும் படத்திலும் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ஒரு பாடலை பாடி வருகிறார். அவர் பாடும் அனைத்து பாடல்கள் அனைத்தும் விஜய்யின் குரலுக்காகவே மிகப் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது நடித்து வரும் புலி படத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன் இணைந்து ஒரு பாடலை பாடவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய் பாடவிருகிறார். ஆனால் இந்த படத்தில் விஜய் பாடும் பாடல் கானா பாடல்களை போன்று அதிரடி டியூனில் உருவாக இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment