↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நான்கு வருடங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து வரும் கியூரியோசிட்டி ரோவர்(Curiosity rover) விண்கலம் தற்போது அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீரானது செவ்வாயில் காணப்படும் Perchlorate எனும் இரசாயனப் பதார்த்தத்தினால் வளிமண்டலத்திலுள்ள நீராவியை உறுஞ்சுவதனால் சேமிக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தவிர இங்குள்ள திரவங்கள் -70 டிகிரி செல்சியஸ் எனும் மறை வெப்பநிலையில் உறைந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கலாம் எனவும் இதனால் நுண்ணுயிர்கள் வாழும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள 15 சென்ரி மீற்றர் உயரமான மணலில் உயர் மட்டத்திலான கதிர்ப்பு நடைபெறுவதனால் உயிர் வாழ்க்கைக்கு சவாலாக விளங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top