↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சீனாவை சேர்ந்த புத்த துறவியான வூ யுங்கிங், 17 வருடங்களுக்கு முன் மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மத்திய சீனாவின் அன்யாங் நகரில் உள்ள லிங்குவான் புத்த விகாரையில், தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ள துறவி யூ யுங்கிங் தங்க அங்கியும், மணிகளும் அணிந்துள்ளார்.
அவரது முகத்தில் உள்ள தசைகளும், தலைமுடி மற்றும் தாடியும் இப்போதும் எவ்வித சேதமுமின்றி அப்படியே உள்ளது.
அது மட்டுமல்லாமல் அவர் தற்போது 102 வயதுடன் வாழ்ந்துக் கொண்டிருப்பதாகவே அவரது பக்தர்கள் நம்புகின்றனர்.
யுங்கிங்கிற்கு 15 வயதிருக்கும் போது அவரது பெற்றோர் மரணமடைந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
இதை தொடர்ந்து துறவியாக முடிவு செய்த அவர், யுங்கிங், ஷான்க்சி யனான் குயிங் ஹுவா விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கேயே இறுதி வரை இருந்த அவர், கடந்த 1998ம் ஆண்டில் மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து தங்களது குருவின் உடலை பாதுகாக்க நினைத்த அவரது சீடர்கள், அவரது உடலை தாமரை நிலையில் வைத்து பெரிய பீங்கான் குவளையில் அடைத்து லிங்குவான் விகாரைக்கு கொண்டு சென்று கண்ணாடி பேழையில் வைத்துள்ளனர்.
1990ம் ஆண்டிலிருந்து புத்த துறவிகளின் உடலை மம்மிகளாக பாதுகாத்து வரும் சூ குவோஷெங் இதுபற்றி கூறுகையில், துறவிகளை மம்மிகளாக பதப்படுத்தி வைத்திருப்பதற்கு பெரிய பீங்கான் குவளைகள் பெரிதும் உதவுகின்றன.
பீங்கான் குவளையில் வைக்கப்பட்ட உடலை பாதுகாக்கும் வகையில் தானியங்கள், மரத்துண்டுகள், நிலக்கரி மற்றும் சந்தனமரம் உள்ளே வைக்கப்படுகிறது.
பீங்கான் குவளைக்குள் வைத்து மூடிய பின், 3 வருடங்களுக்கு பின் அது திறக்கப்படும்போது உடல் அழுகாமல் இருந்தால், அந்த துறவியின் உடல் தங்க முலாம் பூசப்பட்டு சிலையாக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 17 வருடங்களாக கண்ணாடி பேழைக்குள் இருக்கும் யுங்கின் முகம், இன்றும் சிதையாமல் இருப்பதை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top