↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினி முதல் அஜித் வரை! சுந்தர்.சி ஸ்பெஷல் - Cineulagam


மக்கள் படம் பார்ப்பதே தன் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்க தான். அந்த வகையில் என்றும் மக்களுக்கு நல்ல தரமான பொழுதுப்போக்கு படங்களை கொடுப்பவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. இவர் தன் ஆரம்ப நாட்களில் நடிகர்+இயக்குனர் மணிவன்னனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
பின் 1995ம் ஆண்டு முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படமே இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அது மட்டுமில்லாமல் அதில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது.
இவரது படங்களில் ஹைலட் என்றுமே நகைச்சுவை காட்சி தான். கவுண்டமணியில் ஆரம்பித்து இக்கால சந்தானம் வரைக்கும் பயன்படுத்திய ஒருசில இயக்குனர்களில் இவரும் ஒருவர். இதன் பிறகு இவர் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம்,உன்னைத் தேடி, அன்பே சிவம், வின்னர், கலகலப்பு, அரண்மனை வரை தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர்.
அதில் குறிப்பாக கைப்புள்ள, வீரபாகு, பால்சாமி போன்ற நகைச்சுவை கதாபாத்திரம் ரசிகர்களின் சமூக வலைத்தளங்களில் இன்றும் வைரல். ஒரு இயக்குனராக மட்டுமின்றி தலை நகரம் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றார். இது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 80களில் வலம் வந்த குஷ்புவை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் ரஜினி, கமல், அஜித் ஆகியோரை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. மேலும், அந்த படங்கள் அவர்கள் திரைப்பயணத்தில் மிகவும் மாற்றத்தை தந்த படங்களாக அமைந்தது. சமீபத்தில் வெளிவந்த இவரின் ஆம்பள படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 
இந்த வெற்றிப்பயணமானது தொடர வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top