
சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிறுப்பாக வளர்ந்து வரும் 'ரஜினி முருகன்' படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் புதன்கிழமை முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி மே 1 என்ற அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடக்கவுள்ளதாகவும் இயக்குனர் பொன்ராம் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பணிபுரிந்த சிவகார்த்திகேயன், பொன்ராம், டி.இமான் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்.லிங்குசாமி தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக பதிவு செய்யப்பட்ட 'என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா' என்ற பாடல் சமூக வலைத்தளத்தின் டிரெண்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஜனவரி 21ல் தொடங்கி மார்ச் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாலும், இந்த படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment