↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கமல்

தமிழில் ஒரு பாடலின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க செய்தவர் தனுஷ். தென்னிந்திய புரூஸ் லீ என அழைக்கப்படும் இவர் ஆறு தேசிய விருதுகளை அள்ளிய ஆடுகளம் திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் வெகுவாக பேசப்பட்டார். இவரின் தற்போதைய வேலையில்லா பட்டதாரி திரைப்படமும் மெகா ஹிட்டாகியது, அடுத்த படமான ‘ஷமிதாப்’ படத்தின் டிரைலரும் சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி அதிக மக்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தினை இயக்குநர் பால்கி இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். பேருக்குத்தான் படம் ஹிந்தி அதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதில் தனுஷ் மற்றும் அக்ஷரா ஹாசன் தமிழ்தான், அதற்கு மேல் இசைஞானியும் உள்ளார். அத்துடன் இயக்குநர் பால்கி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தமிழகத்தினைச் சேர்ந்தவர்கள். அமிதாப் பச்சனுடன் சேர்ந்து தனுஷ் நடிக்கும் முதல் படம் இது.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதால் படத்தினை புரோமோட் செய்ய ஜனவரி 23 இல் படக்குழு சென்னை வருகிறது. கமலின் இளைய மகள் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆவதால் கமலஹாசன் இவ்விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் பிப்ரவரி 6 இல் திரையைத் தொடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top