2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்", விக்ரமின் "ஐ", விஷாலின் "ஆம்பள" ஆகிய படங்கள் போட்டி போட தயாராக உள்ளது. இந்நிலையில் திடீரென்று சிவகார்த்திகேயனின் "காக்கிச் சட்டை" படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்தப் பொங்கலில் வெளியாகும் படங்களில் இரண்டு போலீஸ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அதிகாரப்பூர்வமான தவல்கள் "காக்கிச் சட்டை" படக்குழுவிடமிருந்து வெளியாகவில்லை இது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காக்கி சட்டை வெளியாகும் பட்சத்தில் மிகப்பெரிய போட்டியொன்று உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
2006 இல் அஜித்தின் "வரலாறு" திரைப்படம் வெளியாகும்போது அதனுடன் சிம்பு,ஆர்யா,சரத்குமார்,விஜயகாந்த் படமும் ரிலீசாகியது.. இறுதியில் வரலாறு அமோக வெற்றி பெற்று அந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட்டாகவும் விளங்கியது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.