↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல நடிகையும் டி.வி தொகுப்பாளினியுமான லட்சுமிராமகிருஷ்ணன், சமீபத்தில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அது அப்படத்தை தயாரித்த மெடிமிக்ஸ் நிறுவனத்தை மேலும் நுரையாக்கி கரைய விட்டதோடு சரி. சிறிதளவு ரிட்டர்ன் கூட தேறவில்லை. இந்த நேரத்தில் இவர் படத்தை விட பல்லாயிரம் மடங்கு சுவாரஸ்யத்துடன் பொழுதுபோக்கு அம்சத்துடன் வெளிவந்து ரசிகர்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் திருடன் போலீஸ் படத்தை பற்றி ட்விட்டரில் பொளந்து கட்டுகிறார் லட்சுமி. இந்த படம் வௌங்கல. குப்பை என்கிற ரேஞ்சுக்கு அவர் தரும் காமென்டுகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறது திரையுலகம்.

வொய்ம்மா வொய்? அவ்வளவும் பொய். முதலில் தனது படத்தில் நடிக்க தி.போ ஹீரோ தினேஷைதான் கேட்டிருந்தாராம். அவர் மறுத்ததால் வந்த வினை என்கிறார்கள். அப்ப... ? சொல்வதெல்லாம் பொய்!

ஆனால் திருடன் போலீஸ் டைரக்டர் கார்த்திக்ராஜுவிடம் கேட்டால் எனக்கும் அவங்களுக்கும் தனிப்பட்ட பகை இல்லைங்க. நானும் அவங்களை நேர்ல சந்திச்சு பேசாலாம்னு இருக்கேன் என்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top