↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நமீதா கடந்த ஆண்டு வரை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த, ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் இளமை ஊஞ்சல்.
இந்தப் படத்தை மங்கை அரிராஜன் இயக்கியுள்ளார். இவர், “அய்யர் ஐ.பி.எஸ்”, “பொள்ளாச்சி மாப்பிள்ளை” போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இந்தப் படத்தை இயக்கியதோடு நடிக்கவும் செய்துள்ளார். மேலும் படத்தில் நமீதா, மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என பல நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் நமீதா போலீஸாக வருகிறார்.
அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. இந்த படத்தை நமீதா கடந்த ஆண்டு வரை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திரைக்கு வரவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் நமீதா எதிர்பார்க்காத இந்த நேரத்தில் இளமை ஊஞ்சல் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், கவர்ச்சி ஓவராக இருப்பதாக கூறி ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதையடுதது படத்தை எப்படியும் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்று முயற்சிகள் நடக்கின்றன. இளமை ஊஞ்சல் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top