↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் 'லிங்கா' படத்தைப் பற்றிய தகவல்கள் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றன. சாதாரண ரசிகர் முதல், திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள் என அனைத்துமே 'லிங்கா' பற்றி பல்வேறுவிதமான நிலைத் தகவல்களை டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுக் கொண்டிருக்க, ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கான 'சூப்பர்ஸ்டார் ரஜினி' பக்கம் கனத்த அமைதியுடன் உள்ளது.


'லிங்கா' படம் ஆரம்பமான நாளிலிருந்து இன்று பாடல்கள் வெளியீட்டு வரை ரஜினிகாந்தின் இந்தப் பக்கத்தில் மருந்துக்குக் கூட 'லிங்கா' படம் பற்றிய ஒரு பதிவு கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தனது மகள் செளந்தர்யா இயக்கிய 'கோச்சடையான்' படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரஜினிகாந்தின் டிவிட்டர் வலைத்தள பக்கத்தில் மே 23ம் தேதிக்குப் பிறகு இதுவரை எந்த பதிவுமே இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.


அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ரஜினிகாந்தின் டிவிட்டர் பக்கம், பல சாதனைகளைப் புரிந்தது என அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ரஜினிகாந்தின் டிவிட்டர் வலைத்தளப் பக்கம், கடந்த ஆறு மாதங்களாக செயல்படாமலே இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இனியாவது, அது செயல்படத் தொடங்குமா அல்லது அப்படியே முடங்கிக் கிடக்குமா என்பது சம்பந்தப்பட்ட 'அட்மின்'களுக்கே வெளிச்சம்.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top