↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

‘கத்தி' என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு? கடந்த நான்கு நாட்களாவே பல இடங்களில் கலெக்ஷன் ‘டிராப்’ என்கிறார்கள். மக்களின் பொதுவான மனநிலை இதுதான். கெட்டவன் இமேஜ் வெகு சீக்கிரத்தில் வந்துவிடும். நல்லவன் என்று நிருபிப்பதற்குள் அது வேகமாய் பரவி முன்னேற்றம் என்கிற நுரையீரலையே கூட பதம் பார்த்துவிடும். முருகதாஸ் விஷயத்தில் ஒவ்வொரு நாளும் இதுதான் நடந்து வருகிறது.
தன்னுடன் சுமார் ஒன்றரை வருடங்கள் பழகி, தனக்கும் முருகதாசுக்கும் பாலமாக விளங்கி கதை திருட்டுக்கு முழு காரணமாக இருந்தவர் முருகதாசுக்கு எல்லாமுமாக இருக்கும் ஜெகன் என்கிற இயக்குனர்தான். இது மீஞ்சூர் கோபியின் வலுவான குற்றச்சாட்டு. இது தொடர்பாக நாம் ஜெகனை தொடர்பு கொண்டோம். அது அப்படியே இங்கே-

கேள்வி:-  சார்… மீஞ்சூர் கோபி சொல்லும் குற்றச்சாட்டுகளை படிச்சிருப்பீங்க, பார்த்திருப்பீங்க. உங்களுடைய பதில் என்ன?
ஜெகன்- நான் ஒண்ணும் பதில் சொல்ல விரும்பல சார். ஏனென்றால் வழக்கு கோர்ட்ல இருக்கு. இப்போதைக்கு எதுவும் பேசக்கூடாது. பேசுனா தப்பு.

கேள்வி:-  உங்கள் மீது ஒரு வலுவான குற்றச்சாட்டை அவர் சொல்றார். அதுமட்டுமல்ல, உங்களுக்கு இருக்கிற அதே சட்டம்தானே கோபிக்கும் இருக்கு? அவர் கோர்ட் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசும்போது உங்க தரப்பு வாதத்தை நீங்க சொல்றதுக்கென்ன?
ஜெகன்- இல்ல சார்… எங்க வக்கீல் அது பற்றி மீடியாகிட்ட பேச வேணாம்னு சொல்லியிருக்கார்.

கேள்வி:-  பல வழக்குகள் கோர்ட்ல நடக்கும் போதே வெளியில் சம்பந்தப்பட்டவங்க பேசி தீர்க்கறதும், பிறகு கோர்ட்டில் அதே வழக்கை வாபஸ் வாங்கறதும் நடந்துகிட்டுதானே இருக்கு? நீங்க உங்க தரப்பு விளக்கத்தை சொல்வதுதானே முறை?
ஜெகன்- இல்ல சார்… நாங்க அதுக்கு தயாரா இல்ல. அவர் பொய் சொல்றார். அது மட்டும்தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

கேள்வி:-   சரி… நீங்க சொல்றதே நியாயமா உண்மையா இருக்கட்டும். அந்த உண்மையை எங்க முன்னாடி சொல்லுங்க. எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் இருபது பேர் ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்றோம். நீங்க வாங்க. இந்த பக்கம் மீஞ்சூர் கோபி வரட்டும். நேரடியா விவாதம் பண்ணுங்க. அதை நாங்க பதிவு பண்றோம். எப்ப வர்றீங்க?
ஜெகன்-ஏங்க… எங்க தரப்புல யாரும் வரமாட்டோம்ங்க. ஏன்னா எங்க வக்கீல் யாருடனும் பேச வேணாம்னு சொல்லியிருக்கார். மீஞ்சூர் கோபி இந்த வழக்கு தொடர்பா மீடியாக்களிடம் பேசுறதே இறையாண்மைக்கு எதிரான விஷயம். அதுக்கு உண்டான தண்ட்னை அவருக்கு கிடைக்குதா இல்லையா பாருங்க.

கேள்வி:-  இதில் முருகதாஸ் கருத்து என்ன?
ஜெகன்- வழக்கு கோர்ட்ல இருக்கு. அதனால் அவரும் பேச மாட்டார்.

கேள்வி:-  அவருக்குதான் இமேஜ் ஒவ்வொரு நாளும் டேமேஜ் ஆகிட்டு இருக்கு. அது தெரியுமா உங்களுக்கு?
ஜெகன்- தெரியும். நாங்க சட்டப்படி எங்க மேல தவறு இல்லேன்னு நிரூபிப்போம். நாங்க கோர்ட்டைதான் நம்புறோம்.

கேள்வி:-  நீங்க வழக்கு கோர்ட்ல இருக்கு. பேச மாட்டோம்னு சொல்றீங்க? ஆனால் விஜய்யின் பி.ஆர்.ஓ பிடி செல்வகுமார் மீஞ்சூர் கோபியை சமாதானத்திற்கு கூப்பிடறதா தெரியுதே? நேற்று கூட அவர் கோபியிடம் பேசினதா சொல்றாங்களே?
ஜெகன்-அது அவங்க விருப்பம். நான் அதுபற்றியெல்லாம் பேச முடியாதுங்க. நான் இப்போ பொள்ளாச்சி போயிட்டு இருக்கேன். போனை வச்சுர்றேன்… டொக்!
இந்த முறை நாங்க எந்த கருதும் சொல்லல.... கத்தி கதை விவகாரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை, ரசிகர்களும்... வாசகர்களும்.... யூகித்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top