↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad முன்பெல்லாம் ரஜினியின் ரசிகர்களாகத்தான் பெரும்பாலான ஹீரோக்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர் மாதிரியும் சிலர் நடித்தனர். ஆனால் அந்த மாதிரி நடிப்பு ரஜினியை தவிர வேறு யாருக்கும் ஒர்க்அவுட் ஆகவில்லை. அதனால் பின்னர் அவரவர் பாணிக்கு மாறினர். அதையடுத்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றும் போட்டி மட்டும்தான் சில நடிகர்களுக்கு மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் படம் வெளியானபோதுதான், ரஜினி படங்களின் வசூலை அந்த படம் முறியடித்து விட்டதாக ஒரு பப்ளிசிட்டியை உருவாக்கி விட்டார் அப்படததின் தயாரிப்பாளரான தனுஷ். இதையடுத்து, ரஜினி முருகன் என்றொரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் அவர் ரஜினியின் ரசிகராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து, அவர் ரஜினியின் தீவிரமான ரசிகர். அதோடு, அவருக்கு ரஜினியைப்போலவே நீளமான கூர்மையான மூக்கு இருப்பது போன்று, கண்களும் ரஜினியை மாதிரியே உள்ளன என்று கூறி வருபவர்கள், அடுத்த ரஜினி என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வருகிறார்களாம். ஆக, ரஜினிமுருகன் படம் வந்தால் இப்போது அடக்கிவாசிப்பவர்கள் அதை இன்னும் உரக்கமாக சொல்வார்கள் போல் தெரிகிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top