கொல்கத்தாவில் நேற்று இலங்கைப் பந்து வீச்சை துவம்சம் செய்து 173 பந்துகளில் 264 ரன்களை விளாசி உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை படைத்த ரோகித் சர்மாவிற்கு சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணி உள்ளிட்வர்களும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில், இந்தியாவே ரோகித் சர்மாவை பாராட்டிக் கொண்டிருக்கின்றது. கிரிக்கெட் உலகமே இவரைப் பார்த்து வியந்து கொண்டிருக்கின்றது. நானும் பாராட்டுகிறேன். இந்திய அரசும் அவரைப் பாராட்டுமென்று எதிர்பார்க்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் ரன் அடித்த சேவாக், சச்சின், ரோகித் சர்மா ஆகிய மூவருமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை நான்கு முறை 200க்கு மேல் ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் ரோகித் சர்மாவே இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதிலும் இந்த முறை 264 ரன்கள் குவித்து உலக அளவில் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் இவர் தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக "பவுண்டரிகள்" அடித்தவரும் இவர் தான், அதிக "சிக்சர்கள்" அடித்தவரும் இவர் தான். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி இது என்று கூறியுள்ளார்.
"நான் ரோஹித் சர்மாவின் இந்த இன்னிங்ஸை பார்க்கவில்லை. ஆனால் 2-வது இரட்டை சதம் எடுப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. ரோகித்தின் இந்த இன்னிங்ஸிற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இது ஒரு சரியான பயிற்சியும், தயாரிப்பும் ஆகும் என்று கூறியுள்ளார்.
கேப்டன் டோணிமிகச்சிறப்பாக ஆடினாய் ரோகித், இதுதான் அனைவருக்குமான ரோகித் சர்மா. முழுத்திறமை.. அருமையான இன்னிங்ஸை மகிழ்வுடன் பார்த்து ரசித்தேன்.
ரவீந்திர ஜடேஜா
ரோகித் சர்மா, கடவுள் ராமருக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக சிறந்த இத்தகைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்பஜன் சிங்: இந்த சாதனை நிலைத்து நிற்கும். பார்க்க மிகவும் அபாரமாக இருந்த இன்னிங்ஸ். வரலாறு உருவாக்கியதற்காக பாராட்டுக்கள்.
அனில் கும்ளே: அடுத்த இலக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம். எதுவும் முடியும் (அவரால்), இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
சஞ்சய் மஞ்சுரேக்கர்: நல்ல பேட்டிங் பிட்ச், வெகு சாதாரணமான பந்துவீச்சு, என்ற பேச்செல்லாம் நிலைக்காது, 173 பந்துகளில் 264 ரன்கள் என்பது சாதாரணமானது அல்ல.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்: முச்சதம் எடுக்கவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 2 ஒருநாள் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். என்னால் ஒரு சதம் கூட எடுக்க முடியவில்லை யூஸ்லெஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment