↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா , ஸ்ரீதேவி, சுதீப் நடித்து வரும் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அதனால், 'விஜய் 58' என்றே குறிப்பிடப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது. இப்படம் குறித்து தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அதில் தற்போது புதிய செய்தியாக ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் '' அதிகாலை, இளவரசி கெட்டப், மேக்கப் , ஹேர், க்ளேம் அப், விஜய் 58'' என ட்வீட் செய்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் மேக்கப் செய்துகொள்ளும் போட்டோ  ஒன்றையும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாக்ராமில் இளவரசி போன்ற தோற்றத்தில் ஒரு புகைப்படமும் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
பிரம்மாண்ட செட்டில் ஒரு பாடல் படமாக்கப்படுவதாக சொல்லப்படும் 'விஜய் 58' படத்தின் பாடலில் ஹன்சிகா, விஜய் இருவரும் ராஜா - ராணி பாணியில் உடையணிந்து நடனமாட இருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

.......................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top