அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை அறிந்தால். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சமுக வலைதளங்களில் என்னை அறிந்தால் படத்தின் கதை இது தான் என்று ஒரு கதை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அஜித், அருண் விஜய்யுடன் ரவுடி போன்று ஒரு கும்பலுடன் சுற்றி திரிகின்றார். அஜித்தை நல்லவர் என நினைத்து அனுஷ்கா காதலில் விழுகின்றார். அவர் படு பயங்கரமாக ஒருவரை கொலை செய்வதை பார்த்து அனுஷ்கா ஆடிப்போய் விடுகின்றார். அங்கு ஆரம்பிகின்றது மிகப்பெரிய பிளாஸ்பேக். என்னை அறிந்தால் இப்படி பேசமாட்ட என அனுஷ்காவிடம் அஜித் பேசும் பஞ்ச் வசனத்துடன் பிளாஸ்பேக் ஆரம்பிக்கின்றது.
அஜித், த்ரிஷா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜீத், மனைவி த்ரிஷா மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கனிம வளங்களை திருடும் அரசியல்வாதி கும்பல் ஒன்றை ஆதாரங்களுடன் அஜீத் பிடித்து கைது செய்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்த அரசியல்வாதி த்ரிஷாவையும் அஜீத் மகளையும் கொலை செய்கின்றனர்.இதற்காக அரசியல்வாதியை பழிவாங்குவதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு களமிறங்குகிறார் அஜீத்.
இந்த ப்ளாஸ்பேக்கை சோகம் கலந்து அதிரடியாக சொல்லியுள்ளனர். இதன் பிறகு படம் முழுக்க அஜித் வரும் அனைத்து காட்சிகளும் மாஸ் தான். இவரின் பின்னணியை அறிந்த அனுஷ்கா வழக்கம் போல் அஜித்திற்கு உதவுகின்றார். அஜீத் எப்படி அரசியல்வாதியை பழிவாங்கினார் என்பதுதான் க்ளைமேக்ஸ்.குறிப்பிடதக்க ஒரு விஷயம் இந்த கதையில் அமைந்துள்ளது. அதாவது சமீபத்தில் அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உண்மை கதையை சினிமாவிற்கு ஏற்றார்போல் மாற்றியுள்ளார் கெளதம் மேனன்.
இது உண்மை கதையா இல்லை, இந்த கதையே பொய்யா என்று படம் வந்தால் தான் தெரியும்.
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.