↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தெலுங்கில் ராஜமௌலி இயக்கும் பாஹுபலி திரைப்படம் இந்திய சினிமா சரித்திரத்தில் இதுவரை எந்தப் படத்திற்கும் செலவு செய்யாத வகையில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்பட்டது.
ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டை மிஞ்சும் வகையில் மலையாளத்தில் மகாபாரத கதை பின்னணியில் ஒரு பிரம்மாண்ட படம் உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. மகாபாரத கதையில் பீமன் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மோகன்லாலுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பீஷ்மராகவும், கோலிவுட் ஸ்டார் விக்ரம் அர்ஜுனனாகவும், டோலிவுட் ஸ்டார் நாகார்ஜுனா யுதிஷ்டிரராகவும், திரௌபதியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலாக மிகப் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறார்களாம். படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்தி வந்துள்ளன.
ஆனால் இப்படம் சம்பந்தமாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
aiswaryarai
»
amithap
»
cinema
»
cinema.tamil
»
mohanlal
»
vikram
» பிரம்மாண்டங்கள் இணையும் புதிய படம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment