லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள செண்ட் தாமஸ் மருத்துவமனை வளாகத்தில், 60வது கின்னஸ் உலக சாதனைப் புத்தக நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.
அதில் உலகின் மிக உயரமான ஆணான துருக்கி நாட்டைச் சேர்ந்த 8 அடி, 3 அங்குல உயரம் உடைய சுல்தான் கோசெனும் ஒரு அடி 7 அங்குல உயரம் கொண்ட நேபாளத்தை சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி என்ற உலகின் குள்ளமான மனிதரும் சேர்ந்து கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்காக சந்தித்துக் கொண்ட சந்திர பகதூரும், சுல்தானும் நெருங்கிய நண்பர்கள் ஆனதோடு, மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்களைத் தவிர உலகம் முழுவதும் இருந்து சுமார் ஆறு லட்சம் கின்னஸ் சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
.......................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.