↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பொதுவாக கவுதம் மேனனின் படங்களில் ஹீரோக்களின் அறிமுகப்பாடல் என்பதே இருக்காது. ஆனால் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜீத்துக்கு ஒரு அறிமுகப்பாடலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிமுகப்பாடல் வித்தியாசமாக கானா பாடலாக இருந்தால் புதுமையாக இருக்கும் என அஜீத் கொடுத்த ஐடியாவின் படி ஹாரீஸ் ஜெயராஜ் கானா பாடலுக்குரிய ஒரு மெட்டை அமைத்து அந்த பாடலை கானா பாலா மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அதாரு அதாரு ...உதாரு உதாரு...பட்டாசும் கொஞ்சம் கொளுத்தாமலே வெடிக்கும்.. என்று தொடங்கும் இந்த அட்டகாசமான பாடல் பயங்கர ஹிட் ஆகும் என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீடு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அஜீத், கவுதம் மேனன், ஹாரீஸ் ஜெயராஜ் ஆகிய மும்மூர்த்திகளின் கூட்டணியில் வெளிவரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை தமிழ் திரையுலக ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top