விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர் கோபி கூறிவரும் நிலையில் தற்போது வேறு சிலரும் கத்தி கதை தங்களுடையது என கத்தியின் கதைக்கு உரிமை கொண்டாடி வருவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கதைக்கு எத்தனை பேர்தான் உரிமை கொண்டாடி வரூவீர்கள் என முருகதாஸ் தரப்பில் இருந்து வெறுப்புடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.
மீஞ்சூர் கோபி மெட்ராஸ் மற்றும் கத்தி ஆகிய இரண்டு படங்களுமே தன்னுடைய கதை என்று கூறி நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கு இணை இயக்குனரான நரசிம்மராவ் என்பவரும் கத்தி கதை தன்னுடைய என்று கூறு தெலுங்கு இயக்குனர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
மேலும் ரங்கதாஸ் என்ற தமிழ் எழுத்தாளர் தனது சீர்காழி பக்கம் மாதானம்' என்ற நாவல்தான் கத்தியாக திரைப்படம் உருவத்தில் வெளிவந்துள்ளதாக தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளாராம்.
இதேபோல் கேரளாவை சேர்ந்த துணை இயக்குனர் ஒருவரும் மலையாள இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுக்க வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இன்னும் எத்தனை பேர் கிளம்பி வரப்போகின்றனர் என்று தெரியவில்லை என்று முருகதாஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த வெற்றியில் பங்குபோட கிளம்பி வரும் போலியானவர்கள் மீது தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திடீர் கதை சொந்தக்காரர்கள் அனைவரும் மீஞ்சூர் கோபியின் வழக்கை திசைதிருப்ப முருகதாஸ் தரப்பினர் செட்டப் செய்தவர்கள் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. எது உண்மை என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment