↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சென்னை ஐஐடியில் மாணவர்களில் ஒரு தரப்பினர் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாச்சாரம் என்ற பெயரில் தங்களது சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கிஸ் ஆஃப் லவ்" என்ற தலைப்பில் அன்பை வெளிப்படுத்தும் முத்தமிடும் போராட்டம் நடத்தினர். இதன்படி மாணவ, மாணவியர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டதுடன் முத்தமிட்டும் கொண்டனர்.

இதற்கு ஒரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர். கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரு உணவகத்தில் முறையற்ற செயல்கள் நடப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி ஒளிபரப்பியதும், அந்த உணவகத்தை சிலர் அடித்து நொறுக்கினர்.


அதனைக் கண்டிக்கும் வகையில், கிஸ் ஆஃப் லவ் புரடெஸ்ட் என்ற பெயரில் ஒரு இயக்கம் துவங்கப்பட்டது. இதற்கென சமூக வலைத்தள பக்கம் தொடங்கப்பட்டது, இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று கொச்சியின் மரைன் ட்ரைவ் பகுதியில் கூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடினர். இதில் கலந்துகொண்டவர்களில் பலரைக் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அதற்குப் பின்னர், இந்தியா முழுவதும் இம்மாதிரி கிஸ் ஆஃப் லவ் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி ஆகியவற்றில் மாணவர்கள் கிஸ் ஆஃப் லவ் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை ஐஐடியில் நேற்று நடந்த சம்பவம் தமிழ்நாட்டில் இதற்கு முன் நடந்திராத நிகழ்வு என மாணவர்களும், பேராசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.





.......................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top