சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சாவு வீட்டில் அதிமுக - திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலையூரை அடுத்த மதுரப்பாக்கத்தில் ஊராட்சி திமுக தலைவர் அமுதா வேல்முருகனுக்கும் அதிகமு கவுன்சிலர் வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் அமுதாவின் கார் உட்பட மூன்று கார், 5 இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன. அதிமுக கவுன்சிலர் வெங்கடேஷன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கும்பல் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக புகார் எழுந்துள்ளது.
பரங்கிமலை துணை ஆணையர் சரவணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment