↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். கடைசி வரை நம்முடன் வரப் போவது வாழ்க்கைத்துணை மட்டும் தான். அதனால் ஆண்கள் குடும்ப சக்கரங்கள் சீராக ஓட மனைவியிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணுவீர்கள். ஆனால் அனைத்தையும் சொல்லக் கூடாது என்று யாரவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?

பொதுவாக மனைவியிடம் எதை சொல்ல கூடாது என்று யாருமே சொல்வதில்லை. என்ன செய்வது! நாம் திருமணத்தின் போது திருமண மந்திரங்களை ஓதுவதற்கு பதிலாக, ஐயருக்கு லஞ்சம் கொடுத்து மனைவியிடம் சொல்லக்கூடாத முதன்மையான 10 விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படி கேட்டால் அது என்னவாக இருக்கும் என்று தெரியுமா? அதைத் தான் தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது.

1 ) “அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா!”
இதனை எப்போதாவது உங்கள் மனைவியிடம் கூறி, மற்ற பெண்களை நீங்கள் கவனிப்பதை பற்றி உங்கள் மனைவிக்கு தெளிவாக கோடு போட்டு கொடுக்கிறீர்களா? உங்களை சுற்றி கன்னி வெடிகள் புதைக்கப்பட்டு விட்டன!

2 ) “எனக்கு பேச தோன்றவில்லை”
இத்னை எப்போதாவது சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இது அடிக்கடி கூறப்பட்டால், உங்களுக்கு இடையில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். அதனால் மனைவியிடம் மனம் விட்டு பேச பழகி கொள்ளுங்கள்.

3 ) “எப்போ பார்த்தாலும் குறை கூறி கொண்டே இருப்பியா?”
இப்படி சொல்வதை தவிர்க்கவும். அதிலும் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் உங்கள் மனைவியிடம், இப்படி நீங்கள் கூறும் போது பத்திரகாளியாக மாறலாம்.

4 ) “திரும்ப திரும்ப ஏன் ஷாப்பிங் செல்கிறாய்?”
உங்களுக்கு அவர்கள் அடிக்கடி ஷாப்பிங் செல்வது பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா? அந்த குஷி ஷாப்பிங்கில் தான் கிடைக்கும் என்றால், அது உங்கள் விதி. குறை சொல்வதற்கு பதில் அதனை கையாளுங்கள்.

5 ) “நீ ஏன் இந்த ஆடையை அணிவதில்லை?”
நீங்கள் ஒரு பேஷன் டிசைனராக இல்லாத பட்சத்தில், அவர்களின் ஆடைகளை பற்றி தொடர்ந்து உங்கள் கருத்தை திணிப்பது பெரிய சண்டையில் தான் முடியும். வேண்டுமெனில் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களுக்கு அன்பாக பரிந்துரை செய்யுங்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top