↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில், பிரணவ் - மோனிகா நடிப்பில் உருவாகியுள்ள படம், 'நதிகள் நனைவதில்லை'. பெற்றோர்கள், தங்களுடைய கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. அவரவர் கால்களில்தான் அவரவர் பயணம் செய்ய வேண்டும். குறுக்கு வழியின் துணையோடு மஹால் கட்டுவதைவிட, நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வம் போன்ற கருத்துகளை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் பார்க்கும் வழக்கமில்லாத விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்தப் படத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை இசைக் கல்லூரியில் இருக்கும் தாகூர் ஃபிலிம் செண்டர் பிரிவியூ தியேட்டரில் அவருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தனது மனைவியுடன் வந்து படம் பார்த்த மயில்சாமி அண்ணாதுரை, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகனையும், நாயகன் பிரணவ்வையும் பாராட்டினார்.
படத்தின் கதை, வசனங்கள், பாடல்கள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே என்னைக் கவர்ந்தன. கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த அழகையும் நேரில் பார்ப்பது போல் அழகாகப் படமாக்கியுள்ளனர். சண்டைக் காட்சிகளைக் கூட ரசிக்கும் விதத்தில் எடுத்துள்ளார் இயக்குநர். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய உயர்ந்த கருத்துகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. படம் முடிந்த பிறகும், அநேக காட்சிகள் மனதைவிட்டு அகல மறுக்கின்றன என்றார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment