தனுஷ், கார்த்திக், அம்ரிய தஸ்தூர், ஐஸ்வர்யா தேவன் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் எஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள அனேகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று எஜிஎஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அழைக்கப்பட்டிருந்தார்.
ஏன் தான் இவரை அழைத்தோமோ என்று எண்ணும் அளவிற்கு பேசிவிட்டார் ஆர்.வி.உதயகுமார், அவர் பேசியதை கேட்டு தனுஷ் கூனிகுறுகினர் ஒரு கட்டத்தில் மேடையை விட்டு கிழே இறங்கமுனைந்தார். பின்பு மீண்டும் அவரது இடத்தில் வந்து அமர்ந்தார். அப்படி என்ன தான் பேசினார் என்று தானே கேட்கிறீர்கள் இதோ…
வேலையில்லா பட்டதாரி படத்தை பார்த்த பிறகு ஆடிப்போனேன் நான், அதில் இவரது ஸ்டைல் சூப்பர் ஸ்டார் ரஜினியை மிஞ்சும் அளவிற்கு இருந்தது என்றும் அதோடு இவர் நடிப்பில் பல கமல்ஹாசன்களை உள்ளடக்கி இருகிறார் என்று கூறவே இந்த கூனிகுறுகல். என்ன தான் தனுஷ் ரஜினியின் மருமகனாக இருந்தாலும் இப்படி ஆர்.வி.உதயகுமார் பேசியதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தாரே தவிர சந்தோஷப்படவில்லை.
தன்னுடைய நடிப்பு திறமையால் தற்போது தான் வளர்ந்து வருகிறார் தனுஷ், இப்படி இருக்கையில் அவரை உசுப்பேத்துவது போன்ற பேச்சு அவருக்கு பிடிக்கவில்லை போல ஆர்.வி.உதயகுமார் பேசும் போது தனுஷ் முகத்தில் ஒருவிதமான நெருடல் இருந்தை அங்கிருந்த பலர் கட்டாயம் பார்த்திருப்பார்கள். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டத்தை பட்டம் போல காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர் பலர் அதில் தற்போது தனுஷையும் உள்ளே தள்ளி ஏன் அவரது பெயரை கெடுக்க நினைக்கிறார் என்று தெரியவில்லை.
0 comments:
Post a Comment