அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் என்னை அறிந்தால் படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரு படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் போதே அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்திவிடுவது தமிழ் சினிமாவின் வழக்கம்.
அப்படி நடத்துவது படம் தயாராகிவிட்டது வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று வினியோகஸ்தர்களுக்கு நியாமகப்படுத்தும் விழா தான் இந்த இசை வெளியீட்டு விழா. ஆனால் பொதுவாகவே அஜித் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே அது அவர் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தால் கூட கலந்து கொள்ளமாட்டார்.
இதற்கும் முன்பு வந்த ஆரம்பம், வீரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சூரியன் எப்.எம் மில் நடைபெற்ற போது கூட அஜித் கலந்துகொள்ளவில்லை, படத்தின் இயக்குனரும் இசை அமைப்பாளரும் தான் கலந்து கொண்டார்கள். அதே போலத்தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் எப்.எம் மில் நடக்குமா இல்லை எதற்கு இசை வெளியீட்டு விழா ஆடியோ சிடியை கடைகளில் கிடைக்கும் படியாக செய்து விடுங்கள் போதும் என்று முடிவெடுப்பார்களா…???
இசை வெளியீட்டு விழா நடந்தாலும் நடக்காவிட்டாலும் அஜித் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு துளிகூட குறையாது என்பது மட்டும் நிஜம்.
0 comments:
Post a Comment