↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருபவர் இமான் அண்ணாச்சி. டி.வியில் குழந்தைகள் நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருவதால், குழந்தைகளுக்கு பிடித்தமானவராகி விட்டார். அதனால், அவர் முகத்தை டி.வியில் பார்த்தாலே ஹைய்... இமான் அண்ணாச்சி என்று குழந்தைகள் சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்.

அதன்காரணமாக, அவர் நடித்த சில படங்களில் டைட்டில் கார்டு போடும்போது அவரது பெயருக்கு முன்பு குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்று போட்டனர். ஆனால், இதை சில மீடியாக்கள் கிண்டல் செய்து செய்தி வெளியிட்டு விட்டார்களாம். அதனால் மனசொடிந்துபோயிருக்கிறார் இமான் அண்ணாசசி.

இதுபற்றி அவர் கூறும்போது, என்னைப் பொறுத்தவரை நன்றாக நடிக்க வேண்டும். நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் கவனம் உள்ளது. அதனால் படத்துக்குப்படம் அந்த கதாபாத்திரமாகவே மாற முயற்சி எடுத்து வருகிறேன். சில படங்களில் எனது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டு கிடைக்கிறது. அதனால் நடித்து வரும் படங்களில் புதிய உற்சாகத்துடன் நடிக்கிறேன்.

மேலும். என்னை சூப்பர் ஸ்டார் என்று நான் ஒருபோதும் நினைத்துக் கொண்டதில்லை. அந்த பட்டத்தை நான் எந்த படத்திலும் போடச்சொல்லவும் இல்லை. நான் ஒரு சாதாரண நடிகன். இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.

அப்படியென்றால் இந்த பட்டம் எப்படி உங்களது பெயருக்கு முன்பு ஒட்டிக்கொண்டது? என்று அவரைக்கேட்டால்,

ஒரு டி.வி நிகழ்ச்சிக்கு சென்றபோது, ஒரு யு.கே.ஜி படிக்கிற சிறுமி என்னைப்பார்த்து, சூப்பர் ஸ்டார் இமான் அண்ணாச்சி என்று சொன்னாள். அதுதான் இப்படி பரவி விட்டது. அதன்பிறகுதான் சினிமாப்படங்களில் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்று என் பெயருக்கு முன்னால் போட்டு விட்டனர். ஆனால் நானாக விரும்பி இந்த பட்டத்தை சூட்டிக்கொள்ளவில்லை

இருப்பினும், சில மீடியாக்கள் என்னை கிணடல் செய்து எழுதுகின்றனர் என்று பீல் பண்ணும் இமான் அண்ணாச்சி, என்னைப் பொறுத்தவரை, நான் நடிக்கிற படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் கைதட்டினாலே போதும. அது எல்லா பட்டங்களையும் மிஞ்சி விடும். அதற்கு மட்டும்தான் நான் ஆசைப்படுகிறேன் என்கிறார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top