↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). இவர் பி.இ. படித்து முடித்து விட்டு லண்டனில் சிவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிக்க இவரது குடும்பத்தினர் காரைக்குடியை சேர்ந்த பெண் தரகர் மூலமாக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தனர்.

பின்னர் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காரைக்குடியில் ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து நேற்று காலை திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் மதுரை அருள்நகரைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருடைய மகள் சவுகார்த்திகா (வயது 24) சென்னையில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

காரைக்குடியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் கார்த்திக் என்பவர் என்னை காதலித்து சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு பதிவாளர் அலுவலகத்தில் வைத்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் என்னிடம், தனது பெற்றோரை சென்று பார்த்து விட்டு அவர்களிடம் நமது திருமணம் விஷயத்தை கூறி அதன் பின்னர் உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு காரைக்குடிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ள தகவல் குறித்து அறிந்தேன். ஆகவே அந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

புகார் மனுவுடன் கார்த்திக்குடன் பதிவு திருமணம் செய்த சான்றிதழ் நகலையும் இணைத்து அனுப்பியிருந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து காரைக்குடி வடக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காரைக்குடி மகளிர் போலீசார் அந்த திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்து மதிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உடன் போலீசார் மணமகன் கார்த்திக்கையும், அவருடைய குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, 2-வது திருமணம் செய்த மணமகன் கார்த்திக், அவருடைய தந்தை நாகராஜன், தாயார் ஜெயலெட்சுமி, தம்பி ராஜசேகரன், தரகர் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கையும், அவருடைய குடும்பத்தினரையும் கைது செய்தனர். தலைமறைவான தரகரை தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top