தமிழ் சினிமாவிற்கு 2015ம் ஆண்டு தொடக்கமே அமர்க்களம் தான். நீண்ட நாட்களாக வரும் என்று எதிர்ப்பார்த்த ஐ இந்த பொங்கலுக்கு வெளிவந்தது. ஐ படத்துடன் டார்லிங், ஆம்பள போன்ற படங்கள் களத்தில் குதித்தது. மேலும், அனேகன், என்னை அறிந்தால், காக்கி சட்டை போன்ற பல எதிர்ப்பார்ப்பிற்கு உரிய படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் கடின உழைப்பில் வெளிவந்த ஐ கலவையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் கதையே இல்லை என பலர் சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்தாலும் விக்ரமின் நடிப்பு படத்தை காப்பாற்றியது. இப்படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது என்று கூறினாலும், படத்தின் பட்ஜெட் ஒப்பிடுகையில் சுமார் லாபம் தான்.
டார்லிங், ஆம்பள
இந்த இரண்டு படங்களும் ஐ போன்ற பிரமாண்ட படங்களுடன் வெளிவந்து டார்லிங் நல்ல லாபத்தை தந்தது, ஆம்பள சமூக வலைத்தில் கிண்டலுக்கு ஆளானாலும் ஓர் அளவு லாபத்தை கொடுத்து தப்பித்தது.
என்னை அறிந்தால்
அஜித்-கௌதம் மேனன் என்பதே படத்தின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. அஜித் படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங், அருண் விஜய் நடிப்பு, அஜித் மீண்டும் பழைய கெட்டப் என அனைத்தும் இருந்தும் அனைத்து ரசிகர்கள் மத்தியில் இப்படம் முழுதிருப்தி தந்ததா என்றால் கேள்விக்குறி தான். ஆனால், படம் ரூ 100 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு குறைந்தபட்ச லாபத்தை கொடுத்தது.
அனேகன்
தனுஷ் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் வெளிவந்த படம் இந்த அனேகன். 3 நாட்களில் ரூ 30 கோடி என படக்குழுவினர்களே இப்படத்தின் வசூலை கூறி வந்த நிலையில், அதெல்லாம் இல்லை, படம் பல இடங்களில் நஷ்டம் என்று சிலரால் கூறப்பட்டது. இன்னும் இப்படம் ஹிட்டா என்பது யாரும் உறுதிப்படுத்தவில்லை.
காக்கிசட்டை
தொடர்ந்து ஹிட் படங்களை மட்டும் கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முதலாக ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கிய படம் காக்கிசட்டை. இப்படம் இவரின் முந்தைய படங்கள் போல் எண்டர்டெய்மெண்டாக இல்லை என்று கூறப்பட்டாலும், சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் இது தான்.
இதேபோல் இவனுக்கு தண்ணில கண்டம், ராஜதந்திரம் ஆகிய சின்ன பட்ஜெட் படங்களும் வெற்றி பெற, வலியவன், எனக்குள் ஒருவன் போன்ற பிரபல நடிகர்களின் படங்கள் பின் வாங்கியுள்ளது.
0 comments:
Post a Comment