↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான டேவிட் ஹசி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கிண்ணம் வெல்லும் அணியை கணித்துள்ளார்.
8வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற 8ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை நடக்கிறது.
இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உட்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஹைதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது.
இந்நிலையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய டேவிட் ஹசி, வலுவான அணியாக இருக்கின்ற பெங்களூர் றொயல் சேலஞ்சர் அணி 2015ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிண்ணத்தை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்சுக்கு 2வது இடத்தையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு 3 மற்றும் 4வது இடத்தையும் கொடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top