↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆபாச நடிகை சன்னி லியோன் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவர் லிப்ட் வழியாக கீழ் தளத்துக்கு புறப்பட்டார். அதே லிப்டில் ரசிகர்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தது. திடீரென வழியிலேயே லிப்ட் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட சன்னி லியோனை ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்களோ என்று எண்ணி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கலக்கம் அடைந்தனர். லிப்டிலிருந்து வெளியே வந்தவுடன் எப்படியெல்லாம் திட்டப்போகிறாரோ என்று பயந்து நடுங்கினார்கள்.

இதற்கிடையில் டெக்னீஷியன்கள் லிப்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து கீழே இறக்கினர். கோபத்துடன் சன்னி வருவார் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக சிரித்துக்கொண்டே வெளியே வந்த சன்னியைப் பார்த்தபிறகுதான் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.சன்னியை அருகில் பார்ப்போமா என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்கள் லிப்டுக்குள் அவர் சிக்கிக்கொண்டதை எண்ணி மகிழ்ச்சியில் பூரித்தனர். லிப்டுக்குள்ளேயே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூறியதுடன், அருகில் நின்று செல்பி படங்களையும் எடுத்துக்கொண்டனர். நல்லவேளையாக யாரும் அவரிடம் சில்மிஷம் செய்யவில்லையாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top