↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த வார விளையாட்டு களத்தில் நடந்த சில நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு இதோ,
பிக் பாஷ் தொடரில் இந்திய வீரர்கள்
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய அணி முன்னாள் அணித்தலைவர் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
கேரி பேலன்ஸ் ரெடி
இங்கிலாந்து அணித்தலைவர் கேரி பேலன்ஸ் வலது கை சுண்டுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், உலகக்கிண்ண போட்டித் தொடருக்கு முன்பாக விளையாடத் தயாராகி விடுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஓய்வு பெற்றார் பிரெட் லீ
அவுஸ்திரேலிய அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ (38 வயது) எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சங்கக்காராவின் புதிய அவதாரம்
இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில், சர்ரே அணிக்காக விளையாட, இலங்கையின் சங்கக்காரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டில்ஷானின் மிரட்டல் சதம்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், டில்ஷான் சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சூப்பர் சீருடை
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 33 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு ஒவ்வொரு வீரருக்கும் பேண்ட் மற்றும் சட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top