சென்னை 600028 படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் தில்லுமுல்லு, தமிழ்ப்படம் உள்பட பல படங்களில் நடித்த நடிகர் சிவா, தற்போது புதுமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்திற்கு '144' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களை விரைவில் இயக்குனர் மணிகண்டன் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சிவா, கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு வணக்கம் சென்னை' படத்தில் நடித்த பின்னர் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment