காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டோனி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து போட்டி 9ம் திகதிக்கு தள்ளிப் போனது.
இதனால் டோனி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். இதற்காக அவர் அவுஸ்திரேலியா கிளம்பியுள்ளார்.
இந்த முறை இந்திய அணித்தலைவர் டோனி ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் களமிறங்குகிறார்.
தலையின் இருபக்கமும் நன்றாக வழித்து விட்டுள்ளார். நடுவில் கீரிப்பிள்ளை ஒன்று தொத்துக் கால்போட்டு படுத்துக் கொண்டிருப்பது போல முடியை விட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் உலகக்கிண்ணப் போட்டிக்கு டோனி என்ன ஹேர் ஸ்டைல் வைக்க போகிறாரே என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment