அண்மையில் வெளிவந்த என்னை அறிந்தால் டீசர் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் நிலையில் தற்போது ஒரு அர்த்தமற்ற குற்றச்சாட்டையும் சிலர் முன்வைக்கின்றனர். அது என்னவெனில் டீசர் பிளே ஆகும்போது "நீங்க உண்மையான அஜித் ரசிகன் என்றால் இதை லைக்,செயார் செய்யுங்கள்" என்ற popup ஒன்று உருவாகிறது. ஆகவே கேட்டு வாங்கியே லைக்ஸ் பெறப்பட்டதாம்...
இன்றைய தமிழ் நடிகர்களை பொறுத்தவரையில் அஜித் என்ற ஒருவரை தவிர மற்றைய எல்லா நடிகர்களும் படமொன்றின் சூட்டிங் முடிந்தபின் இசைவெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு ... என்று அனைத்துவிதமான புரமோஷன்களிலும்களிலும் பங்குபற்றி படம் பற்றிய கருத்துக்களை ரசிகர்களை கவரும்வகையில் தெரிவிக்கின்றனர். இதை நாம் எல்லாரும் புரியும்படி சொல்லவேணுமெனில் "எல்லாரும் வந்து எங்கள் படத்தை பாருங்கள், படம் வெற்றி பெற உதவுங்கள்" என்பதே அதன் அர்த்தம். அதில் தவறு எதுவுமில்ல. ஒரு வியாபாரி தன்னிடமுள்ள பொருட்களை விற்கவேணுமெனின் வாடிக்கையாளர்களை கவருவதற்கு ஏதாவது செய்யணும். ஆனா, எதுவுமே இன்றி ஒருவர் படம் ஓடுகின்றதென்றால் அது அந்த நடிகருக்கு இருக்கும் எதிர்பார்ப்பே காரணம்.
அதுபோக சில நடிகர்கள் இவற்றுக்கெல்லாம் அப்பால் ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட்டிங் என்றெல்லாம் வைத்து எதிர்மறையான விளம்பரங்களையும் தேடுகின்றனர். இப்படியெல்லாம் கூத்துக்கள் நடைபெறும் சினிமாவில் 60-70 கோடிகளில் எடுக்கப்பட்ட படம் ரிலீசாகும்போதே ரசிகர்களிடம் கையேந்தாத அஜித்துக்கு இந்த டீசர் லைக்ஸ் தான் ஒரு கேடா என்ன? என்ற தொனியில் பல அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
எது எப்பிடியோ "நீங்க உண்மையான அஜித் ரசிகன் என்றால் இதை லைக்,செயார் செய்யுங்கள்" என்ற விளம்பரம் இருப்பதால் லைக் செய்த 65000+ பேரும் அஜித் ரசிகர்ள்தான் என்ற மறைமுக கெத்தை அஜித் ரசிகர்களுக்கு வழங்கிவிட்டனர் இந்த விமர்சகர்கள் எனபதே உண்மை. இப்பவெல்லாம் இவ்வாறான அர்த்தமற்ற விமர்சனங்கள் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களுக்கெதிராக சமூகவலைத்தலங்களில் மலிந்தே இருக்கின்றன. எது எப்பிடியோ இவையெல்லாம் தாரிப்பாளரை பிச்சைக்காரனாக்காமல் விட்டாலே போதும்.
0 comments:
Post a Comment