தமிழகத்தில் ‘லிங்கா’ படத்துக்காக அனைத்து தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இதர படங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அமெரிக்காவில் 200–க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இங்கிலாந்தில் 85 தியேட்டர்களிலும், பிரான்சில் 50 தியேட்டர்களிலும், டென்மார்க்கில் 20 தியேட்டர் களிலும் திரையிடப்படுகிறது. ஜெர்மனியில் 16 தியேட்டர்களிலும், ஹாலாந்தில் 9 தியேட்டர்களிலும், சுவிட்சர்லாந்தில் 6 தியேட்டர்களிலும், நார்வேயில் 4 தியேட்டர்களிலும், பெல்ஜியத்தில் 3 தியேட்டர்களிலும், சுவீடன் நாட்டில் 2 தியேட்டர்களில் லிங்காவை திரையிட ஒதுக்கி உள்ளனர். வெளிநாடுகளில் இதற்கு முன் ரஜினியின் எந்த படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்கின்றனர்.
தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் துவங்குகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். பல தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. கூட்டத்தை கட்டுபடுத்த தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment