↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இணைய தளத்தில் அவ்வப்போது பொய் தகவல்களை பரப்புவதற்கென்றே ஒரு கூட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கோலிவுட் வட்டாரம் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறது. நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி பக்கத்தை தொடங்கி இஷ்டத்துக்கு தகவல் வெளியிட்டு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றனர்.
சமீபத்தில் இந்த வம்பில் சிக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ‘விஜய் நடிக்கும் 60வது படத்தை நான்தான் இயக்குகிறேன்' என்று அவர் சொன்னதுபோல் டிசைன் செய்து விஷமிகள் டுவிட்டர் பக்கத்தில் மெசேஜ் போட்டிருக்கின்றனர். இதைப்பார்த்து ஷாக் ஆனார் ஆனந்த். தானே வெளியிட்டதுபோல் பதிவாகியிருந்த அந்த மெஜேசை அழித்த ஆனந்த், ‘போலியான இந்த மெசேஜை யாரும் நம்ப வேண்டாம். போட்டோ ஷாப்பில் தில்லுமுல்லு செய்து நானே வெளியிட்டதுபோல் இப்படியொரு பொய்யை பரப்பி இருக்கின்றனர்.
விஜய்யுடன் நேருக்கு நேர் படத்திலேயே நான் பணியாற்றி (ஒளிப்பதிவாளராக) இருக்கிறேன். அவருக்கான ஸ்கிரிப்ட் உருவாக்கும்போது நிச்சயம் அவரை சந்தித்து சப்ஜெக்ட் சொல்வேன்‘ என குறிப்பிட்டார். சில மணி நேரத்தில் இந்த மெசேஜையும் ஆனந்த் அழித்துவிட்டார். ‘என்னுடைய இந்த விளக்கத்தை பயன்படுத்தி அஜீத், விஜய் ரசிகர்கள் இடையே தர்க்கம்ஏற்பட்டிருப்பதாக அறிகிறேன். இரண்டு நடிகர்களையுமே நான் மதிக்கிறேன்.
இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். என்னால் இவர்களது ரசிகர்களுக்குள் தர்க்கம் ஏற்படுவதை விரும்பவில்லை. எனவேதான் மெசேஜை நான் நீக்கிவிட்டேன்‘ என குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment