↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
                      (link here)

அண்மையில் forbes india என்ற தளம்(இப்பிடி ஒரு சைட் இருந்தது நம்மவர்கள் பலருக்கு இப்பதான் தெரியும்) இந்தியாவின் டாப் 100 பிரபலங்களை வரிசைப்படுத்தியது. இதில் விஜய், ரஜினி,அஜித் ஆகியோரை முறையே 41,45,51 ஆவதாக தரப்படுத்தியது. இதை பல இணையத்தளங்கள் செய்தியாக பதிவேற்றியது, அதில் behindwoods உம் ஒன்று.

இதில் நாம் சிந்திக்கவேண்டியது என்னவெனில் இவ்வாறான தரப்படுத்தல்களை இன்று எத்தனையோ இணையத்தளங்கள் தரப்படுத்தி வருகின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தரப்படுத்தல்கள்.. ஆகவே நாங்கள் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றைத்தான் ஒவ்வொரு தளங்களும் தமது ரசனைக்கேற்ப/அறிவுக்கேற்ப தரப்படுத்துகின்றன.. இதை நாம் தனிமனித கருத்தாகவே பார்க்கவேணும். ஒரு விஜய் ரசிகன் தனக்கு விஜய்தான் பெஸ்ட் என்று சொன்னா அதை நாம் குறை சொல்லமுடியாது..ஆனா, அவரின் கருத்தை வைத்து மற்றவர்களும் விஜய் தான் பெஸ்ட் எண்டா அதுதான் செம காமெடி.... அப்பிடியொரு நிலைதான் இந்த தரப்படுத்தல்களும்.

இவ்வகையான தரப்படுத்தல்கள் பற்றி ரசிகர்களே பலர் தெளிவு நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனா, முன்னணி நடிகர்களில் ஒருவரும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவருமான விஜய்க்கு இந்த விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேணும் என்ற பக்குவம் இன்னும் வரவே இல்ல. இந்த காமெடி இணையத்தள தரப்படுத்தலை மையப்படுத்தி அஜித்,ரஜினியை விட விஜய்தான் பெஸ்ட் எண்ட தலைப்பில் வெளிவந்த behindwoods செய்தியை அப்பிடியே screen shot எடுத்து தனது டுவீட்டரில் பதிவேற்றி உள்ளார். அஜித்தை தனது நண்பர் என்றும், ரஜினியை தனது குரு என்றும் சொல்லித்திரியும் விஜயின் பட்டிக்காட்டுத்தனம் இன்று வெளிப்பட்டுவிட்டது.

தரப்படுத்தல் இல்லாது, உண்மையிலே ஏதாவது ஒருவிடயத்தில் சக நடிகர்களை வென்றால்கூட அதை பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பிரபலமும் போடமாட்டார்கள். போட்டித்தன்மையை மனதளவிலே வைத்துக்கொள்வார்கள். அப்பிடி இருக்கையில் ஒன்றுக்குமே உதவாத இந்த தரப்படுத்தலை ஒருவிடயமாக பதிவேற்றியது விஜயின் வங்குரோத்தையே எடுத்துக்காட்டுகிறது.


சரி நாம வேற வழிக்கு வாறோம். தரப்படுத்தலை வெளியிட்ட இதே forbes india அஜித், விஜய் பற்றி வெளியிட்ட இன்னுமோர் செய்திகளின் ஸ்கிரீன் ஷார்ட் கீழே இருக்கிறது.. அதில் அஜித்தின் சம்பளம் 40.33 கோடிகள் எனவும் விஜய்க்கு 33 கோடிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோக வீரம் - 130 கோடி, ஜில்லா 70 கோடி, கத்தி 113 கோடி கலக்சன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் விஜய்க்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில் கீழுள்ள ஸ்கிரீன் ஷார்டையும் பதிவேற்றி அஜித்துக்கு கிட்டவும் நீங்க இல்லை எண்டு ஒத்துக்குங்க....

      


3 comments:

  1. nee oru ajith rasigan.veeram 130kodi endarl athu 100cr club list il vadhirukkanume.aanal ithuvarai 100cr club il inainthulla nadigargal Rajini,Kamal,and Vijay Mattume.nee innondari gavaini jalra payale Kathi 113 verum 20 natkalil.athai podamal ippadi ajithkku jalraa adippatharkku bathil nee veru tharangetta thozil seyyalam

    ReplyDelete
    Replies
    1. Sry, Mr, Mangatha itself joined 100crore club, Veeram too crossed

      Delete
    2. Sry, Mr, Mangatha itself joined 100crore club, Veeram too crossed

      Delete

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top