தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் இணைய வேண்டும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள். அந்த வகையில் முருகதாஸ்-அஜித், தீனா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தனர். நீண்ட நாட்களாக இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முருகதாஸ் தரப்பில் டுவிட்டரில் இருந்து வந்த செய்தி என்னவென்றால் இவர் ஹிந்தி படத்தை முடித்த கையோடு அடுத்து அஜித்துடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்கிரிப்ட் ரெடியாக உள்ளதாகவும், அஜித்தும் அந்த கதையை சம்மதித்து விட்டதாகவும் டுவிட் செய்துள்ளனர்.
ஆனால், இந்த செய்தியை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் உடனே தன் சமூக வலைத்தளத்தின் மூலமாக மறுத்துள்ளார், மேலும் இது வெறும் வதந்தி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment