↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகம் முழுவதும் பரவிவரும் செல்ஃபி பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து எடுத்த ஒரு ஆய்வு முடிவு அறிக்கை சமீபத்தில் வெளியானது.
இந்த ஆய்வில் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து தங்கள் ஆய்வை மேற்கொண்டனர்.
அதன்படி, செல்ஃபி பழக்கம் சில தகவல்களை வெளிப்படுத்துகிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
தன் உடல் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.
அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டி செயற்கையான அழகிய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புவதாக ஆய்வு கூறுகிறது.
மேலும் என்ன காரணத்திற்காக செல்பி எடுக்கப்படுகிறது என்று ஆய்வுசெய்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், வேலைக்காக ஆட்களைத் தெரிவு செய்யும் போது சமூகவலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்துகொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்துவிடுவதாக ஆய்வின் இறுதி அறிக்கை கூறுகிறது.
மேலும் “உங்களுக்கு வேலை வழங்குபவர் பலகோணங்களில் உங்களை ஆய்வு செய்வார். செல்ஃபிக்களை அதிகம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத -வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார்.
செல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும், சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
மேலும், ஒருவேளை பணியில் இருந்து கொண்டே, செல்ஃபிக்களை எடுத்து அப்டேட் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேலதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top