↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், நான்ஈ சுதீப் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
பாடல் காட்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்கள் மத்தியில் விஜய், ஹன்சிகா, நடனம் ஆடியதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. ‘வீரபாண்டி கோட்டையிலே’ என்று தொடங்கும் பாடல் படமாக்கபட்டதாகவும், இந்த காட்சியில் விஜய் கிளாடியேட்டர் ஹீரோ பாணியில் காஸ்ட்யூம் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஹன்சிகா இளவரசி காஸ்ட்யூமில் அதிகளவு நகைகளுடன் இருந்ததாகவும், இந்த பாடல் காட்சியில் பங்குபெற மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து சுமார் 300 அழகிகள் வரவழைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. விஜய் 58 படத்திற்காக மொத்தம் 140 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதில் 50 நாட்கள் படப்பிடிப்பு இந்த பிரமாண்ட செட்டிலேயே முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விஜய்யின் பி.ஆர்.ஓ இந்த படத்தை தயாரிக்கிறார்.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top