↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் ‘ என்னை அறிந்தால்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் நிலையில் உள்ளது. மேலும்,  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த்யிருக்கிறது.

இதையடுத்து ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் அஜித் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகிறார். இதை மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

 ‘கத்தி’ படத்தின் வெற்றியை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் ஒரு நேரடிப் படமொன்றை இயக்குகிறார். இதில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார். இப்படத்தை அடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார்.

முருகதாஸ் இயக்கிய முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'தீனா' படத்தில் இருந்துதான் அஜித் 'தல' என்று அழைக்கப்படுகிறார்.

13 வருடங்ளுக்குப் பிறகு அஜித்தும், முருகதாஸும் இணைந்திருப்பதால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. (source-vikatan)

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top