இன்று ஈராக்கின் தலைநகர் பக்தாத்திலுள்ள விமான நிலையத்துக்கு மிக அண்மையில் 25 Km தூரம் வரை ISIS போராளிகள் நெருங்கி வந்ததாக ஈராக்கில் ISIS மீதான போரில் பங்கேற்று வரும் அமெரிக்க இராணுவத்தின் தளபதி அறிவித்துள்ளார்.
இது குறித்து ABC ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவித்த ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸே சிரிய குடா எல்லைப் பகுதியில் இவ்வாரம் முழுதும் அமெரிக்கா தாழ்வாகப் பறக்கக் கூடிய அப்பாச்சே ஹெலிகாப்டர்கள் மூலம் ISIS தாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஆக்டோபர் 7 முதல் ஃபல்லுஜா இற்கு அண்மையில் முன்னேறி வரும் ISIS போராளிகளைத் தடுக்க அப்பாச்சே ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப் பட்டதாக ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டு இருந்ததுடன் இது மிகத் தாழ்வாகப் பறப்பதால் தரையில் இருந்து வானத்தில் பறக்கும் விமானங்களைத் தாக்கக் கூடிய ஏவுகணைகளால் இந்த ஹெலிகாப்டர்கள் இலகுவில் தாக்கப் படும் சவாலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் ஈராக்கில் ISIS மீது தரை வழித் தாக்குதலைத் தொடுக்கும் திட்டம் இல்லை என அதிபர் ஒபாமா மறுபடியும் உறுதிப் படுத்தியுள்ளார். இதேவேளை ஈராக் துருக்கி எல்லைப் பகுதியில் அமெரிக்கா உட்பட மேற்குலக போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்து no-fly-zone பகுதியை உருவாக்க வேண்டும் என துருக்கி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் இதற்கு அமெரிக்கா இணங்கியதாகத் தெரியவில்லை.
மறுபுறம் ஓர் ஆன்லைன் பத்திரிகையில் தாம் பெண்களை பாலியல் அடிமைகளாகக் கடத்தி வருவது இஸ்லாமிய மத நியமத்தின் படிதான் என ISIS கூறியுள்ள போதும் இதனை உலகம் முழுதும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகம் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment