↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெண்களை இரகசியத்தின் பூங்கா என்று கூறலாம். அவர்களது மலர்வனமான மனதில், பூத்து, குலுங்கி, வாடி மறைந்த எண்ணற்ற இரகசியங்கள் புதைந்திருக்கின்றன. "அட, போப்பா... பொண்ணுங்க சரியான ஓட்ட வாயி.." என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்கள் கூறுவன மற்றவர்களை பற்றி மட்டுமே இருக்கும்.

பெண்கள் ஒரு போதும் தங்களை பற்றிய இரகசியங்களை கசியவிடுவது இல்லை. ஏன், தாலிக் கட்டிய கணவனாக இருந்தாலும் கூட. தங்களை பற்றிய சில முக்கியமான தகவல்களை சிறிதளவு கூட கசியாமல் பாதுகாப்பதில் பெண்கள் பலேக் கில்லாடிகள்!!!

இனி, அப்படி கடுகளவுக் கூட கசியாமல் ஆண்களிடம் பெண்கள் மறைக்கும் இரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்...

உடலுறவு 

ஆண்களை போலவே பெண்களுக்கும் உடலுறவுக் குறித்து அனைத்து விஷயங்களும் தெரியும். ஆனால், எங்கு, எப்படி உடலுறுவு வைத்துக் கொண்டால் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள்.

முன்னாள் காதலன்... 

ஆண்களுக்கு பல முன்னாள் காதல்கள், விருப்பங்கள், ஆசைகள் என்று பல இருக்கும் பட்சத்தில், பெண்களுக்கு இருக்காதா என்ன. ஒருவேளை தங்களது முன்னாள் காதலனையோ, அல்லது பிடித்தமான நபர்களையோ கண்டால் பெண்கள் அதைப்பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்களாம்.

ஒரே மாதிரியான செயல்பாடு 

ஒருவேளை, உங்களது செயல்பாடு, அல்லது அணுகுமுறை ஏதாவது அவர்களது முன்னாள் காதலர்களை போல பிரதிபலிக்கும் ஆயின் அதை உங்களிடம் கூறமாட்டார்கள்.

ஆண்கள் எப்போதும் கெத்து பார்ட்டிகள். தான் இத்தனை பேரை காதலித்தேன், இதுவெல்லாம் செய்தேன் என்று பட்டியலிட்டுக் கூறிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை, சிரித்து, சிரித்தே மழுப்பும் குணம் உடையவர்கள். இதுப் போன்ற விஷயங்களை எல்லாம் அவர்களிடம் கொக்கிப் போட்டு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

ஏமாற்றிய கதை 

தாங்கள் ஒருவரிடம் பழகியதையும், அவனை விட்டு விலகியதையும் பெண்கள் ஆண்களிடம் கூறுவதில்லை. ஒருவேளை அதைக் கூறினால், தங்களை தவறாக புரிந்துக் கொள்வார்களோ என்று அவர்கள் அஞ்சுவது உண்டு. ஆனால், அதை மறைப்பதும் கூட ஓர் ஏமாற்று வேலை தான் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்

அது ஒரு கனா காலம் 

அனைத்திலும் மேற்கத்தியம் பார்க்கும் நமது ஆட்கள், காதலில் மட்டும் கொஞ்சம் பின்தங்கி தான் உள்ளார்கள். பல காதல் செய்வதில் அல்ல, அதை மறைப்பதில். உண்மையாகவே அவர்கள் காதலித்து, ஏதேனும் பிரச்சனையின் காரணமாக பிரிந்திருந்தாலும் கூட, அந்த நினைவுகளை பகிர மறுப்பார்கள் பெண்கள்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top