வேலாயுதம் படத்தையடுத்து ஹன்சிகா மீண்டும் புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்தது குறித்து ஹன்சிகா கூறும்போது, இந்த ஐந்து வருடத்தில் விஜய் அவர்களின் பழக்கத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அவரின் இளமை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. அவரின் தொழில் பக்தி, தன்னுடன் பணிப்புரிபவர்களிடம் நடந்து கொள்ளும் பண்பு, ரசிகர்களை அரவணைத்து செல்வது, படப்பிடிப்பு சமயங்களில் எவர் ஒருவரை கண்டாலும் வணக்கம் சொல்வது என ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை வியக்க வைப்பார் விஜய்.
அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே மகிழ்ச்சிதானே. அவரின் இளமை ரகசியம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை” என்று கூறியுள்ளார் ஹன்சிகா.
0 comments:
Post a Comment