↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

36vayadhinile

மலையாளத்தில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கான 36வயதினிலே என்ற படத்தின் மூலம் 8 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும் போது, சூர்யாவிற்காக நான் இந்த விழாவிற்கு வரவில்லை. நான் ஜோதிகாவின் தீவிர ரசிகன். அவருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன் என்று கூறினார்.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, ஒரு கணவன் தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். ஆனால், இதில் சூர்யா பெஸ்ட். ஜோதிகாவை ரொம்பவும் சந்தோஷமாக வைத்திருக்கிறார். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இதை ரசிகர்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top