↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நாளை கொல்கத்தாவில் நடைபெற உள்ள, ஐபிஎல் நடப்பு சீசன் தொடக்க விழா குறித்த ஒரு விளக்க பார்வை இதோ: ஐபிஎல் சீசன் 8 தொடங்குவதை முன்னிட்டு, நாளை கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இரவு 7.30 மணிக்குதான் ஆட்டம் தொடங்கும் என்ற போதிலும், மாலை 5 மணி முதல் ரசிகர்கள், ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். iplt20.com இணையதளத்தில் இதற்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். தொடக்க விழா நிகழ்ச்சிகளை சோனி மேக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. ஹாட்ஸ்டார் வாயிலாகவும் தொடக்க விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top