↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அக்ஷரா மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் துளசி நடித்ததாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

ஷமிதாப்' புரமோஷன் விழா ஒன்றில் மனம் திறந்து பேசிய அக்ஷரா ஹாசன், 'மணிரத்னம் இயக்கிய கடல்' படத்தில் நடிக்க தன்னை அவர் அணுகியதாகவும், ஆனால் அந்த சமயத்தில் தான் 'ராகுல் தொலக்யா' இயக்கிய 'சொசைட்டி' என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்ததால் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும், அதுமட்டுமின்றி தான் மனதளவில் நடிகையாக அந்த நேரத்தில் தயாராகவில்லை என்றும், அதனால் கடல்' படத்தில் நடிக்க மறுத்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் அமிதாப், தனுஷ் போன்ற ஜீனியஸ் நடிகர்களோடு அறிமுகம் ஆனதில் தான் பெருமை அடைவதாகவும், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் தான் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top