↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் முதல் வியாபாரம் ஆரம்பமானது என்ற தகவலை நேற்று பார்த்தோம். என்னை அறிந்தால் படத்தின் கேரள மாநில தியேட்டர் உரிமையை கே.ஜி.நாயர் அவர்கள் ரூ.2.35 கோடிக்கு பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அஜீத் நடித்த ஆரம்பம் திரைப்படம் கேரளாவில் ரூ.1.45 கோடிக்குதான் விற்பனையானது. இந்த படம்தான் இதுவரை அதிகபட்சமாக கேரளாவில் விலைபோன அஜீத் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை என்னை அறிந்தால் திரைப்படம் தற்போது முறியடித்துள்ளது.

அஜீத்தின் ஆரம்பம் கேரளாவில் மொத்தம் ரூ.6 கோடி வசூல் செய்தது. அதைபோலவே என்னை அறிந்தால் வசூல் செய்யுமா? அல்லது அந்த சாதனையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள 'என்னை அறிந்தால்' படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top