தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகு கொடுக்கவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு கைலாகு கொடுப்பதற்காக கையை நீட்டினார். எனினும் அதனை மறுத்த மைத்திரிபால கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று மாலை கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட மைத்திரிபால, தமது சுத்தமான கைகள் ஊழல்களால் அழுக்கடைந்துள்ள மஹிந்தவின் கைகளில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தாம் கைலாகு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தாம் எடுத்து சிங்கத்தின் தைரியத்தை ஒத்த தீர்மானம் கைலாகு கொடுப்பதன் மூலம் தளர்ந்து போய் விடக்கூடாது என்பதும் தமது செயற்பாட்டுக்கான காரணம் என்று மைத்திரிபால தெரிவித்தார்.
0 comments:
Post a Comment